மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரும்பு கேட் சரிந்து விழுந்து 5 வயது சிறுமி பரிதாப பலி.. தந்தையை பார்க்கச்சென்ற போது நடந்த சோகம்.! நெஞ்சை உலுக்கும் துயரம்.!
தந்தையை பார்க்க ஆவலோடு தாயுடன் சென்று 5 வயது சிறுமி இரும்பு கேட் விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காம்ப்ளக்சில் துணிக்கடை செயல்படுகிறது. இங்கு காவலாளியாக பணியாற்றி வருபவர் சங்கர். சங்கருக்கு மனைவி, 5 வயதுடைய குழந்தை ஹரிணி ஆகியோர் இருக்கின்றனர்.
நேற்று இரவில் சங்கரை பார்ப்பதற்காக அவரின் மனைவி மற்றும் 5 வயது குழந்தை ஹரிணி ஸ்ரீ ஆகியோர் காம்ப்ளக்ஸுக்கு வந்துள்ளனர்.
அச்சமயம் இரும்பு கேட்டை மூட முயற்சித்தபோது, எதிர்பாராத விதமாக கேட் சிறுமி ஹரிணி ஸ்ரீயின் மீது விழுந்துள்ளது. இதனால் அவரின் தலையில் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை மற்றும் தாய், மகளை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவனையில் விரைந்து சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி சிறுமி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் மரணம் தொடர்பாக தகவல் அறிந்த கீழ்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.