#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எவ்வுளவு நேக்கா திருடுறான் பாருங்களேன்.. பழக்கடை உரிமையாளர்களே உஷார்..!
மாங்காடு அருகே கடைக்கு வந்தவர் வாழைத்தார் வாங்குவது போல நடித்து, கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் கரண், வடிவேல் நடிப்பில் வெளியான கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அரிசி கடையில் அரிசியை வாங்குவது போல வரும் நபர்கள், கடையில் இருந்த பொருட்களை களவாடி செல்வார்கள். இந்த நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலமானவை. இந்த நிலையில், அதனைப்போன்றதொரு மற்றொரு சம்பவம் மாங்காடு அருகே நடந்துள்ளது.
சென்னையில் உள்ள மாங்காடு, மதனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் வாழைப்பழ மண்டி வைத்துள்ளார். இவரின் கடைக்கு நேற்று முன்தினத்தில் வாழைத்தார் வாங்குவதாக வாடிக்கையாளர் வந்த நிலையில், வாழைத்தாரை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். கடையின் உரிமையாளர் வாழைத்தாரை காண்பிக்க, அவரின் கவனத்தை திசைதிருப்பிய மர்ம நபர் வாழைத்தாரை நாற்காலி மீது வைத்துள்ளார்.
பின்னர், அதனை கல்லாப்பெட்டி அருகே வைத்த நிலையில், ரூ.2000 பணத்தை இலாவகமாக திருடிவிட்டு வாழைத்தார் வேண்டாம் என்று கூறி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்தும் கல்லாவை பார்க்கையில், அதில் இருந்த ரூ.2000 பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு சாகுல் அமீது அதிர்ச்சி அடைந்துள்ளார். கடையில் இருக்கும் சி.சி.டி.வியை பார்க்கையில் வாழைத்தார் வாங்க வந்தார் பணத்தை திருடி சென்றது அம்பலமானது.
இதனையடுத்து, சி.சி.டி.வி கேமிரா ஆதாரத்துடன் மாங்காடு காவல் நிலையத்தில் சாகுல் அமீது புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனது நட்பு வட்டாரத்தில் உள்ள பழக்கடை, காய்கறிக்கடை உரிமையாளர்களிடமும் விஷயத்தை கூறி கவனமாக இருக்குமாறும் சாகுல் அமீது அறிவுறுத்தியுள்ளார்.