மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவனின் காமுகம்..! விட்டில் பூசியாய் 2 சிறுமிகள், கைகொடுத்த இன்ஸ்டா நட்பு..! நடந்ததோ கொலை..!
கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கு விசாரணையில், அவர் 2 சிறுமிகளை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்து தொல்லை செய்ததால் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.
சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி, பெரிய ஓபுளாபுரம் ஈச்சங்காடு கிராமத்தில் இருக்கும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், வாலிபரின் உடல் புதைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆரம்பக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், வாலிபர் கொலை செய்யப்பட்டு உடல் புதைக்கப்ட்டது அம்பலமானது. கொலையான வாலிபர் தாம்பரத்தை அடுத்துள்ள மண்ணிவாக்கம் பகுதியை சார்ந்த பிரேம்குமார் (வயது 20) என்பது உறுதியானது. இவர் மீனம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வந்துள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பிரேம்குமார் பள்ளி மாணவிகள் இரண்டு பேரை ஆபாசமாக படமெடுத்து, இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி பணம் பறித்ததில் கொலை செய்தது அம்பலமானது.
பிரேம்குமார் தனது பகுதியை சார்ந்த 10 ஆம் வகுப்பு பயின்று வரும் 2 சிறுமிகளுடன் பழகி வந்த நிலையில், அவர்களை ஆபாசமாக படமெடுத்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை மாணவிகளிடம் காண்பித்து, அவ்வப்போது பணம்பறித்து வந்துள்ளார். இவ்வாறாக ரூ. இரண்டரை இலட்சம் வரை மாணவிகளிடம் பிரேம்குமார் பறித்து இருக்கிறார்.
பிரேம் கேட்கும் நேரத்தில் எல்லாம் சிறுமிகள் பயந்து பணம் கொடுத்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியும் பணம் கொடுத்து இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பிரேம் குமாரின் தொல்லை தொடர்ந்து அதிகரித்த காரணத்தால், மாணவிகள் இருவரும் என்ன செய்வது? என்று புரியாமல் விழிபிதுங்கி இருக்கின்றனர்.
இன்ஸ்டாகிராமில் தங்களுடன் பழகி வந்த அசோக் என்ற நண்பரிடம் தகவலை தெரியப்படுத்தி, இதற்கு என்ன தீர்வு காணலாம்? என சிறுமிகள் இருவரும் கேட்டுள்ளனர். அசோக் அவனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட, இந்த நிகழ்வுக்கு பின்னர் தான் பிரேம்குமார் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாணவிக்காக அசோக் தான் பிரேம்குமாரை கடத்தி கொலை செய்திருக்கலாம் என காவலர்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அசோக் தலைமறைவாக இருக்கிறார். இவ்வழக்கு தொடர்புடைய பிற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் மாணவிகளின் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் கொலைக்கு நேரடி உதவி செய்தனரா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.
மேலும், பள்ளி 10 ஆம் வகுப்பு பயின்று வரும் 2 மாணவிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் இந்த விஷயம் தொடர்பாக கூறுகையில், "பிரேம்குமார் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் மாணவிகள் பணம் கொடுக்க முடியாத நிலைக்கு சென்று, இன்ஸ்டாகிராம் நண்பர் அசோக்கிடம் விஷயத்தை தெரிவித்துள்ளனர்.
இதனால் மாணவிகளின் தூண்டுதலின் பேரில் பிரேம்குமாரை அசோக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர். அசோக் கைதானதற்கு பின்னர் உண்மை நிலவரம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இணையவழியில் மாணவ - மாணவிகளுக்கு தற்போதைய நிலையில் பாடம் பயிற்றுவிக்கப்ட்டு வரும் நிலையில், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற துயரங்களில் பெண் பிள்ளைகள் சிக்கிக்கொண்டால், ஒன்று பெற்றோரிடம் தகவலை தெரியப்படுத்த வேண்டும் அல்லது காவல் நிலையம், குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்மகனும் தன்னுடன் நட்புரீதியாக பழகும் பெண்களை தனது சகோதரி போல எண்ணினால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக அவர்களை போகப்பொருளாக நினைத்தால் அதனால் வரும் விளைவு உங்களின் கழுத்துக்கு என்றேனும் கட்டாயம் குறிவைக்கும் என்பதற்கு சிறந்த உதாரண சம்பவமாக இது அமைந்துள்ளது.