திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம்..4 பெண்கள்., 3 ஆண்கள்.. எஸ்கேப் ஆன வாடிக்கையாளர்கள்?..!
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி கட்டிடத்தில் இருக்கும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெறுவதாக நுங்கம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, மசாஜ் சென்டரை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தபோது விபச்சாரம் நடைபெறுவது உறுதியாகவே, நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பெண்களை வைத்து விபச்சார தொழிலில் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
எம்.பி.கே நகர் தீபக் (வயது 37), குன்றத்தூர் அசோக் குமார் (வயது 31), போரூர் அருண்குமார் (வயது 23) ஆகியோர் விபச்சார தொழிலை நடத்தி வந்துள்ளனர். மேலும், 4 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னனியில் விபச்சார கும்பல் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.