திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
6 வயது சிறுமியை துரத்திக்கடித்த நாய்; சென்னையில் மீண்டும் பதறவைக்கும் சம்பவம்..!
சென்னையில் உள்ள பெரம்பூர், கௌதமபுரம் பகுதியை சேர்ந்தவர் அமீத். இவரின் மனைவி பேகம். தம்பதிகளுக்கு 6 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
துரத்திய நாய்கள்
சம்பவத்தன்று பேகம் தனது மகளை மசூதிக்கு அழைத்துச்சென்று, பின் மீண்டும் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு இருந்தார். அச்சமயம் கூட்டமாக சேர்ந்த தெரு நாய்கள் கும்பல், சிறுமியை துரத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியை பீதியில் உறையவைத்த புலி.! மறந்திருந்து பார்த்த இளைஞர்கள் கண்ட காட்சி.!
சிறுமி காயம்
இதனால் பதறிப்போன சிறுமி அலற, மகளை உடனடியாக தாய் மீட்டாலும் ஒரு நாய் மட்டும் அவரை கடித்தது. இதனையடுத்து, சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் கோரிக்கை
இந்த விஷயம் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பெற்றோரின் தரப்பில் தற்போது வரை புகார் அளிக்கப்படவில்லை. மேலும், மாநகராட்சி நிர்வாகம் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த ஒரே மாதத்தில் 4 க்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
வீடியோ நன்றிதந்தி டிவி
இதையும் படிங்க: ரோட்டோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது திடீர் ஆசிட் வீச்சு.! அதிர்ந்த சென்னை.! நடந்தது என்ன??