மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அலட்சியமாக தண்டவாளத்தை கடந்த ஐடி ஊழியர் இரயில் மோதி பலி; சென்னையில் சோகம்.!
சென்னையில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில், இன்று நடந்த விபத்து ஒன்றில் பெண் ஐடி ஊழியர் பரித்தாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை வந்தாரை வாழவைக்கும் மண்ணாக இருக்கிறது. இங்கு பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்களின் பயணத்திற்கு பிரதானமாக மாநகர பேருந்து, புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: பெண்கள் வீட்டை நோட்டமிட்ட இளைஞர்; சந்தேகத்தில் அடித்து நொறுக்கியதில் மயங்கி பலி.. சென்னையில் அதிர்ச்சி.!
இரயில் தண்டவாளத்தை கடந்த இளம்பெண்
இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஐடி ஊழியர் தாரணி (வயது 23), இன்று காலை வேலைக்காக சென்றுள்ளார். அச்சமயம் பெருங்களத்தூர் இரயில் நிலையத்தை, தண்டவாளத்திற்கு இடையே ஆபத்தான வகையில் கடந்து சென்றுள்ளார்.
இரயில் மோதி பரிதாப பலி
அப்போது, அவ்வழியாக வந்த அந்தியோதயா இரயில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட தாரணி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தாரணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து தாம்பரம் இரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உடலில் மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலி; லேப்டாப் சார்ஜ்போடும்போது விபரீதம்.!