தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தவணைத்தொகையை செலுத்தாததால் பாம் புரளியை தூக்கிப்போட்ட நிதி நிறுவனம்... அலறியடித்து ஓடிய போலீசுக்கு சென்னை போலீசுக்கு பேரதிர்ச்சி.!
ஆன்லைனில் கடன் வாங்கிக் கொண்டு தவணைத்தொகையை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியவர் மீது, வெடிகுண்டு தயாரித்து விற்பதாக காவல்துறைக்கு சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ஐயப்பன்தாங்கல் முத்தமிழ் நகரைச் சேர்ந்த சபீர் என்பவர், வீட்டில் வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்து வருவதாக சென்னை ஆவடி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மர்ம நபர் ஒருவர் போன் செய்து கூறியுள்ளார். இதனால் மாங்காடு காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு, மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் என அனைவரும் மர்ம நபர் சொன்ன வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அந்த நேரத்தில் கால் செய்து வெடிகுண்டு இருப்பதாக கூறியவரின் செல்போன் நம்பரை வைத்து, போலீசார் விசாரணை செய்ததில் அந்த போன் நம்பர் ஜப்பானிலிருந்து வந்ததும் அம்பலமானது. இயர்லி சேலரி என்ற ஆன்லைன் ஆப் வைத்து நடத்தி வரும் தனியார் நிறுவனத்திடம் இருந்து இந்த போன் கால் வந்துள்ளதும் உறுதியானது.
காவல் துறையினர் வீட்டிலிருந்த இம்ரான் என்பவரை பிடித்து விசாரித்ததில், இரண்டு வருடத்திற்கு முன்பு சபீர் என்பவர் இந்த வீட்டில் இருந்து வந்ததாகவும், தற்பொழுது அவர் புழல் பகுதிக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். புழல் பகுதிக்குச் சென்ற போலீசார் சபீரை பிடித்து விசாரித்ததில், அவர் மூன்று வருடத்திற்கு முன்பு ஐயப்பன்தாங்களில் வசித்து வந்ததாகவும், அப்போது இயர்லி சேலரி என்ற ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்து ரூ.5 இலட்சம் கடன் வாங்கியதும், கடன் வாங்கிய பின்பு அவருக்கு விபத்து நடந்ததால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
கடனைத் திருப்பி கொடுக்காததால் ஆன்லைன் நிறுவனம் கடனை திரும்ப கேட்டு தன்னை பல தொந்தரவு செய்ததாகவும், கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனால் அவர் அந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டதாகவும், பணம் கொடுக்காமல் சமீர் வேறு இடத்திற்கு சென்றதால் அவர்கள் சமீர் வசித்த வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் கொடுத்த வரை கண்டுபிடிக்க முடியாததால் கடன் கொடுத்த ஆன்லைன் ஆப் நிறுவனமே இதுபோன்று வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பி காவல் துறையினரை பரபரப்பாக்கியது அம்பலமானதால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.