மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேங்காய் துண்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சுத்திணறி பலி.. பெற்றோர்கள் விழிப்புடன் இருங்கள்..!
சென்னையில் உள்ள பொன்னேரி, திருபாலைவனம் பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் வசந்த். இவரின் மகன் சஞ்சீஸ்வரன் (வயது 3). சம்பவத்தன்று வசந்தின் வீட்டில் சமைக்க தேங்காய் துண்டுகளை நறுக்கி வைத்துள்ளனர்.
அப்போது, வீட்டினுள் விளையாடிக்கொண்டு இருந்த சஞ்சீஸ்வரன், தேங்காய் துண்டுகளை எடுத்து சாப்பிட்டுள்ளார். குழந்தை சாப்பிட்ட தேங்காய் துண்டு, தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளது.
இதனால் பதறிப்போன தாய் குழந்தையை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்திற்குள்ளாகவே சஞ்சீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மகனின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறியழுதது, அங்கு காண்போரையும் கண்கலங்க வைத்தது. இந்த விஷயம் தொடர்பாக திருபாலைவனம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.