#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தம்பியை போதைக்கு அடிமையாக்கிய இளைஞர் கழுத்தறுத்து கொலை: சகோதரர்கள் பரபரப்பு சம்பவம்.!
சென்னையில் உள்ள புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் வாலிபரின் சடலம் கொலை செய்யப்பட்டவாறு கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த புளியந்தோப்பு காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்ட்டவர் புளியந்தோப்பு பி.எஸ்.கே மூர்த்தி நகரில் வசித்து வரும் ரமேஷின் மகன் சீனு (வயது 23) என்பது தெரியவந்தது. இவரின் மீது 3 திருட்டு வழக்குகளும் உள்ளன.
விசாரணையில், அங்குள்ள மூர்த்தி நகரை சேர்ந்த சஞ்சய் (வயது 20), கடந்த டிசம்பர் 10ம் தேதி போதை ஊசியை பயன்படுத்தி உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, சஞ்சய்க்கு போதை ஊசி மற்றும் மாத்திரையை வாங்கிக்கொடுக்க சீனு உதவியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சயின் சகோதரர் வசந்த், சூர்யா ஆகியோர் சீனுவின் மீது ஆத்திரம் கொண்டுள்ளனர்.
இவர்களின் திட்டப்படி சீனுவை வரவழைத்த கும்பல், கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக உள்ள வசந்த், சூர்யா ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.