பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திருமண வீட்டில் கள்ளக்காதல் பஞ்சாயத்து.. கைகலப்பில் கொத்தனார் குத்திக்கொலை.!
சென்னையில் உள்ள புளியந்தோப்பு, அம்பேத்கார் நகர் 2 ஆவது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திர பாபு (வயது 40). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மெர்சி (வயது 38). இவர்கள் இருவருக்கும் 4 மகள்கள் உள்ளனர். மெர்ஸியின் தம்பி மகள் ஸ்வேதா. இவருக்கு 11 ஆம் தேதி திருமணம் நடைபெற தேதி குறிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, புளியந்தோப்பில் உள்ள ராஜேந்திர பானுவின் வீட்டில் நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில், உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், மதுபோதையில் இருந்த ராஜேந்திர பாபு, மனைவி மெர்ஸியின் அக்கா மருமகன் சதீஷ் (வயது 30) என்பவரிடம், நீ என் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாய் என்று கூறி தகராறு செய்துள்ளார்.
அப்போது, வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறவே சதீஷ் ராஜேந்திர பாபுவை கீழே தள்ளிவிட்டு, கல்லை வைத்து தாக்கியுள்ளார். மேலும், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ராஜேந்திர பாபுவின் கழுத்தில் குத்தியுள்ளார். அலறல் சத்தத்தை கேட்டு விரைந்த உறவினர்கள், ராஜேந்திர பாபுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ராஜேந்திர பாபுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வசியம் தொடர்பாக தகவல் அறிந்த புளியந்தோப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்து வியாசர்பாடி பகுதியில் பதுங்கியிருந்த சதீஷை நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.