#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமண ஆசை காண்பித்து பள்ளி சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் போக்ஸோவில் கைது.!
பள்ளியில் படிக்கும் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி சிறுமி வீட்டில் இருந்து மாயமான நிலையில், இதுகுறித்து பெற்றோர்கள் திரு வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமி மாயமானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமி சஞ்சய் (வயது 21) என்ற வாலிபரை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய சஞ்சய், அவரை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு திருமண ஆசைகாண்பித்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறார். சஞ்சயின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல் துறையினர், செம்பியம் அனைத்து மகளிர் காவல் துறையினர் உதவியுடன் அவரை கைது செய்துள்ளனர்.
வழக்கு விசாரணையும் செம்பியம் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சஞ்சயை சிறையில் அடைத்தனர்.