#Breaking: செங்கல்பட்டு, கடலூர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்; மக்களே ரெடியா இருங்க.! 



Chennai RMC Says Heavy Rain Red Alert on 29 Nov 2024 

விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று பின் வலுவிழந்தது. வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒரு நாள் முழுவதும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அடுத்த சில மணிநேரத்தில் புயலாக வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரெட் அலர்ட்

இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சென்னை போதைப்பொருள் கடத்தல் விவகாரம்., காவலரைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி கைது.! 

heavy rain

நாளை சென்னைக்கு ரெட் அலர்ட்

புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முதல் வரும் 3 நாட்களுக்கு மழையை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கலாம் என்ற நிலையில், சென்னைக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் உருவாகும் வாய்ப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், மக்கள் கடலோரங்களில் செல்ல, கடலில் குளிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பல இளைஞர்களுடன் காதல்.. 19 வயது இளைஞருடன் ஓட்டம் பிடித்த செவிலியர்.. போலீஸ் ஸ்டேஷனில் கதறல்.!