திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்.. கார் பார்க்கிங் விவகாரத்தில் பகீர்.. பாதிக்கப்பட்டவர் கண்ணீருடன் குமுறல்.!



chennai-saligramam-house-owner-parking-issue

 

பார்க்கிங் திரைப்படத்தை போன்று நடந்துள்ள பிரச்சனை சம்பவம் ஒன்று சென்னையில் அம்பலமாகியுள்ளது.

 

சென்னையில் உள்ள சாலிகிராமம், எம்.ஜி.ஆர் தெருவில் வசித்து வருபவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு ஒன்றை சொந்தமாக வாங்கி இருக்கிறார். இந்த வீட்டின் பார்க்கிங் பகுதியில், அதே பகுதியில் வசித்து வரும் வம்சி என்பவர், தனது காரை நிறுத்தி வைத்துள்ளார். 

இதையும் படிங்க: ஜல்லிக்கற்கள் வீசி; மாநில கல்லூரி, பச்சையப்பாஸ் மாணவர்களுக்கு இரயில்வே டிஎஸ்பி எச்சரிக்கை.!

வீடு காலியாக இருந்தபோது காரை நிறுத்தியவர், வீட்டின் உரிமையாளர் வந்ததும் அதனை எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பல மாதமாக அந்த காரை எடுக்காமல் அங்கேயே நிறுத்தி இருக்கிறார். ஒருகட்டத்தில் வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Parking

ஒருதரப்புக்கு ஆதரவு?

புகாரை ஏற்க மறுத்த அதிகாரிகள், இது சிவில் வழக்கு என்பதால் நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என கூறி இருக்கிறார்கள். இதனையடுத்து, அசோசியேசன் சார்பில் பேசப்பட்டபோதும் தீர்வு கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் காரை வம்சி எதற்ச்சையாக எடுத்தபோது, வீட்டின் உரிமையாளர் காரை நிறுத்தி இருக்கிறார். 

பின் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக காரை வீட்டின் உரிமையாளர் அங்கேயே நிறுத்தி வைத்த நிலையில், வம்சி தரப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த புகாரை ஏற்ற அதிகாரிகள், வம்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, வீட்டின் உரிமையாளரிடம் வந்து வம்சி தரப்பே இங்கு காரை நிறுத்தும் என கூறி இருக்கிறது. 

கண்ணீருடன் கோரிக்கை

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார். மேலும், நேற்று 30 க்கும் மேற்பட்ட நபர்கள் கும்பலாக சேர்ந்து காரை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். சொந்தமாக வீடு வாங்கி நிம்மதியின்றி தவிக்கும் எங்களுக்கு உரிய நீதி வேண்டும் என வீட்டின் உரிமையாளர் கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார். 

இதையும் படிங்க: #Breaking: இரவு 7 மணிவரை 24 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!