ஜல்லிக்கற்கள் வீசி; மாநில கல்லூரி, பச்சையப்பாஸ் மாணவர்களுக்கு இரயில்வே டிஎஸ்பி எச்சரிக்கை.!



southern-railway-dsp-ramesh-warning-to-presidency-pacha

 

சென்னையில் உள்ள மாநில, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே கோஷ்டி மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், இவர்கள் இரயில் பயணத்தின்போது ஜல்லிக்கற்களை வைத்தும் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் பயணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், இரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தென்னக இரயில்வே டி.எஸ்.பி ரமேஷ் பச்சையப்பாஸ் மற்றும் பிரேசிடன்சி கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 12 ம் வகுப்பு வரை கிராமத்தில், முதன்மை நகரில் பயின்றுவிட்டு, சென்னையில் மேற்படிப்புக்காக மாணவர்கள் சேருகிறார்கள். 50 க்கும் அதிகமான கல்லூரிகள் சென்னையில் இருந்தாலும் பச்சையப்பாஸ் - பிரசிடன்சி கல்லூரி மாணவர்கள் அதிகம் பிரச்சனை செய்கிறார்கள். இவர்கள் திருத்தணி, கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து வரும்போது, இரண்டு கல்லூரிகளில் தனது கல்லூரியே பெரியது என ஈகோ அடைகின்றனர். 

இதையும் படிங்க: "கல்யாணம் பண்ண சொன்னா வீடு புகுந்து.." மிரட்டிய இளைஞன்.! தட்டி தூக்கிய காவல் துறை.!!

தேவையில்லாத வேலைகள் வேண்டாம்

இதை போட்டி படிப்பு, விளையாட்டுகளில் இருந்தால், அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது, பின்வரும் மாணவர்களும் பின்பற்றலாம். மாறாக, வயதானவர்கள், பெண்கள் என பொதுமக்களை குறிவைத்து இரட்டை அர்த்த பாடல்கள், சத்தமிடல், மிரட்டல் என தேவையில்லாத வேலைகளை இவர்கள் செய்கிறார்கள். கத்தியை தீட்டுவது, ரயிலுக்கு மேலே ஏறுவது போன்றவற்றை செய்கின்றனர். இவை மிகவும் கேடானது. 

இரயில் பயணத்தின்போது எதிர்தரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் பெட்டியில் ஏறிக்கொண்டு, கைப்பையில் ஜல்லிக்கற்களை வைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உங்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நடந்தால் நீங்கள் எப்படி எண்ணுவீர்கள்?. எங்களிடம் சிக்கும் மாணவர்களின் பெற்றோர் குறைந்த சம்பளத்தில் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படுகின்றனர். 

கேமிராவில் சம்பவம் பதிவானாலே தண்டனை

அவர்களை பற்றி எந்த விதமான கவலையும் இல்லாமல் நீங்கள் சுற்றி வருகிறீர்கள். உங்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றாலும், மருத்துவமனைக்கு செல்லாமல் உங்களை படிக்க வைக்கிறார்கள். நல்ல வேலைக்கு சென்றுவிட்டால், உங்களின் குடும்பம் முன்னேறும். முன்பைப்போல இல்லாமல், சட்டங்கள் இப்போது மாறிவிட்டன. கேமிராவில் நீங்கள் செய்தது பதிவாகி இருந்தாலே குற்றம் உறுதி செய்யப்பட்டுவிடும். 

குறைந்தபட்ச தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உங்களின் கல்லூரிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தாது. நீங்கள் செய்யும் செயல்கள் பாராட்டப்படவேண்டும், பதறவைக்கும் வகையில் இருக்கக்கூடாது. 1% மாணவர்கள் மட்டுமே இவ்வாறான செயல்களை செய்கிறார்கள். இன்று உங்களுக்கு உதவும் நபர்கள், நாளை உங்களின் தேர்வின் போது கல்விச்செலவுக்கு ரூ.100 கூட கொடுக்க மாட்டார்கள். படிப்பு, விளையாட்டில் திறமையை காண்பியுங்கள், விரும்பத்தகாத நிகழ்வுகளை நீங்கள் செய்ய வேண்டாம். இரயில் முழுவதும் கேமிரா கொண்டு வரப்பட்டுள்ளது. ஆதாரத்துடன் சிக்கி வாழ்க்கையை இழக்க வேண்டாம். 

இதையும் படிங்க: நண்பர்கள் எதிரிகளானதால் பயங்கரம்; சிறுவர்கள் பிரச்சனை கொலையில் முடிந்தது.. வயிற்றை கிழித்துக் கொன்ற தோழன்.!