#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
மழையுடன் அதிவேக பயணம்... 22 வயது இளம்பெண் தலையில் அடிபட்டு துள்ளத்துடிக்க பலி.!

சென்னையில் உள்ள திருநின்றவூர், வேப்பம்பட்டு மண்ணொளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீ சதீஷ் (வயது 22). ஐ.டி.ஐ படித்துள்ள சதீஷ், அம்பத்தூர் பாடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வேப்பம்பட்டு சர்வ சக்தி நகரில் வசித்து வருபவர் துர்கா லட்சுமி (வயது 22). இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கால் சென்டரில் பணியாற்றுகிறார்.
நேற்று இரவில் இருவரும் வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில் வந்துகொண்டு இருந்த நிலையில், ஸ்ரீ சதீஷ் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது, நெமிலிச்சேரி பகுதியில் கனமழை பெய்து, முன்னாள் சென்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருந்துள்ளது.
அப்போது, சதீஷ் முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடிக்கவே, வாகனத்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு பின்னால் அமர்ந்து வந்த துர்காலட்சுமி கீழே விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
ஸ்ரீசதீஷ் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், பூந்தமல்லி காவல் துறையினர் துர்காலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.