மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் திடீர் சாலைமறியல்..!
தமிழகத்தில் திருநங்கைகள் பல துறைகளில் கால்பதிக்க தொடங்கி, பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். சில சுயதொழில் செய்து சமூகத்தில் நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இன்றளவும் பல திருநங்கைகள் பேருந்து நிலையத்திலும், இரயில் நிலையத்திலும் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இவர்கள் யாசகம் வழங்க விருப்பம் உள்ளவரிடம் இருந்து பணம் பெற்றுச்செல்லும் நிலையில், சில நேரங்களில் மக்களிடம் வழிப்பறி செய்வது போன்ற குற்றங்களும் நடந்து வருகின்றன. ஒருசில திருநங்கைகளின் செயலால், அவர்களின் மீதான நன்மதிப்பு இழக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலரும் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மற்றும் அவ்வழியாக வந்த காரை மறித்து திடீர் ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள், காரின் பேன்ட் மீது ஏறி அலப்பறை செய்த வீடியோ வெளியாகியுள்ளது. இவர்கள் எதற்காக சாலையை மறித்தார்கள், என்ன பிரச்சனை என்ற விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ பதிவுக்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒருசில திருநங்கைகளின் செயல்பட்டால் அவர்களின் மீதான நன்மதிப்பை அவர்கள் கெடுத்துக்கொண்டு, நல்ல நிலையில் வாழும் திருநங்கைகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி தருவதாக குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.