"என் ஏரியாவுல படகா?" மீட்புப்படை அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய கவுன்சிலர்.. வேளச்சேரி வெள்ளம் பரிதாபங்கள்.!



Chennai Velachery DMK Counselor Disturb Rescue Operation During FLood 


சென்னையில் உள்ள வேளச்சேரி, ஏ.ஜி காலனி பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துகொண்டது. இதனால் அங்கு கீழ்தள குடியிருப்பில் இருந்த மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி வந்தனர். 

இதனிடையே, அப்பகுதியில் குடியிருந்து வரும் முதியவர்களின் சிலர், தங்களை மீட்கக்கூறி காவல்துறை மற்றும் அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அதிகாரிகளுடன் வாக்குவாதம்:
இதனால் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 2 படகுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வயோதிகர் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அச்சமயம், அங்கு வந்த அப்பகுதியின் கவுன்சிலர் ஆனந்தன், மீட்புப்படை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். 

இதையும் படிங்க: தாமாக முன்வந்து குழந்தைகளுடன் வீதியை சுத்தம் செய்த தனியார் நிறுவன ஊழியர்; குவியும் பாராட்டுக்கள்..! 

நான் இந்த ஏரியா கவுன்சிலர், என்னை கேட்காமல் நீங்கள் எப்படி படகை கொண்டு வரலாம்? நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். எனக்குத்தான் வெள்ளம் என்றால் அழைப்பார்கள் என உரத்த குரலில் பேசினார்.

புறப்பட்ட அதிகாரிகள்

மீட்புப் பணிக்கு வந்திருந்த அதிகாரிகளும், "வெள்ளத்தின்போது எங்களுக்கு அழைப்பு வந்ததால் இங்கு வந்துள்ளோம். மீட்பு பணியில் தானே ஈடுபடுகிறோம்" எனக்கூற, கவுன்சிலரோ, இதனை நீங்கள் செய்தால் நெட்டில் எடுத்து போடுவார்கள் என அவர்களை அங்கிருந்து போகச்சொல்லி விரட்டினார். 

ஒருகட்டத்தில் அதிகாரிகளும் அவரிடம் வாக்குவாதம் செய்வது வீணானது என்பதை உணர்ந்து, அங்கிருந்து அமைதியாக புறப்பட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கவுன்சிலரும் முதியவர் மற்றும் சில பொதுமக்களை அழைத்துக்கொண்டு டிராக்டரில் ஏறி பயணித்தார்.

வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி

இதையும் படிங்க: போலீஸ் அக்கா ராக்ஸ்., ரிப்போர்ட்டர் ஷாக்ஸ்.. போறபோக்கில் ஒரு கலாய்.. வைரலாகும் வீடியோ.!