திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தாமாக முன்வந்து குழந்தைகளுடன் வீதியை சுத்தம் செய்த தனியார் நிறுவன ஊழியர்; குவியும் பாராட்டுக்கள்..!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை அதிகாலை ஆந்திர கடலோரப்பகுதி - சென்னை இடையே கரையை கடக்கவுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்தது. அதனை போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி & தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
அம்மா உணவகத்தில் இலவச உணவு
தொடர்ந்து சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள காரணத்தால், அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர். மேலும், அரசின் சார்பில் இன்றும், நாளையும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மாநகராட்சி சார்பில் வீடு-வீடாக சென்று உணவு வழங்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் இருப்போருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: போலீஸ் அக்கா ராக்ஸ்., ரிப்போர்ட்டர் ஷாக்ஸ்.. போறபோக்கில் ஒரு கலாய்.. வைரலாகும் வீடியோ.!
மிககனமழை எச்சரிக்கை
மழை-வெள்ளம் காரணமாக வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற தாழ்வான இடங்களில் இருக்கும் மக்கள், தங்களின் கார்கள், இருசக்கர வாகனங்களை பாலத்தில் பத்திரமாக நிறுத்தி வைத்த நிகழ்வுகளும் நடந்து இருந்தன.
இதனால் இன்று தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், தலைநகர் சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மிககனமழை பெய்தது. இன்று காலைக்கு மேல் மழை குறைவது போல தோன்றினாலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இரவு மற்றும் அதற்கு மேல் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
தீவிர களப்பணியில் மாநகராட்சி அதிகாரிகள்
வெள்ளத்தை படிப்படியாக வெளியேற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாசன். இவர் சோஹோ (Zoho) நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் பெய்த சென்னை மழை காரணமாக அவர் வசித்து வரும் பகுதியில் சாலைகளில் குப்பைகள் இருந்துள்ளன.
சுத்தத்தை கற்றுக்கொடுங்கள்
மாநகராட்சி பணியாளர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்பார்க்காமல் தான் இருக்கும் பகுதியை அவரே சுத்தம் செய்துள்ளார். இதற்கு அவரின் குழந்தைகள், குடும்பத்தினர், நண்பர்களும் உதவியாக இருந்துள்ளனர். மேலும், சுத்தம் போன்ற விஷயங்களை நாமே நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அவரின் செயல் பாராட்டுகளை குவிக்கிறது.
Don't wait for the #ChennaiCorporation to come & clean the roads during the flood. It's our responsibility to clean up the waste we've created. Teach your kids, work as a team, & help keep Chennai clean #ChennaiRains #DeputyCMUdhayanidhiStalin @Udhaystalin @mkstalin #kolathur pic.twitter.com/SPjsLcG8GT
— Prakashan (@prakashan) October 16, 2024
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை 5 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!