96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திடீரென வந்த போன் கால்..! ஓடிச்சென்று 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம் பெண் என்ஜினீயர்..!
போன் பேசிய கையோடு இளம் பெண் ஒருவர் 5 வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஊர்மிளா(23) என்ற இளம் பெண் சென்னை நாவலூரில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
வழக்கம்போல் ஊர்மிளா தனது வேலையை பார்த்துக்கொண்டிருந்தபோது நேற்று மதியம் அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. போன் பேசிவிட்டு ஊர்மிளா மிகவும் பதற்றமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 5 வது மாடிக்கு சென்ற ஊர்மிளா அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஊர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஊர்மிளாவின் தற்கொலை குறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நடந்த முதற்கட்ட விசாரணையில் ஊர்மிளாவின் பெற்றோர் திருமணத்திற்காக மாப்பிளை பார்த்தாக கூறப்படுகிறது.
ஊர்மிளா ஏன் தற்கொலை செய்துகொண்டார்.? தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.