குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ; ரெடியா இருங்க மக்களே... முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி..!!



Chief Minister Stalin issued a statement that the ownership of the family heads will be given a budget of Rs 1,000.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து, இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் இருந்து வருகிறது.

திமுக அரசு தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில், இந்த உரிமை தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், குடும்ப தலைவர்களுக்கு வழங்குவதாக கூறிய உரிமைத்தொகை 1000 ரூபாய் பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் நிதிநிலை சரியாக இல்லாததால் இந்த உரிமை தொகை இதுவரை வழங்கப்படவில்லை எனவும், இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார். இதனால் அங்கிருந்த பெண்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.