சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்த குழந்தை!! ஆத்திரத்தில் கொன்று புதைத்த கொடூரன்!
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் ‘ஹாலோ பிளாக்’ தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அமீத் தனது மனைவி மற்றும் 4 வயது மகள் ஈசானி ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
அவரது மகள் ஈசானி கடந்த 14ஆம் தேதி காணமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், மறுநாள் காலை அப்பகுதியில் உள்ள சூளையின் பின்புறம் உள்ள முட்புதரில் சிறுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும் குழந்தையின் உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன. இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 2 தொழிலாளர்கள் வெளியே அழைத்து சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இருவரும் அமீத்தின் உறவினர்கள் என்று தெரிகிறது.
சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரித்தும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளனர். இந்நிலையில், 4 நாள் நடத்திய தீவிர விசாரணையில் கொலையாளியை கண்டுபிடித்தனர். அதே தொழிற்சாலையில் வேலை செய்து வரும், நிலக்கர் என்பவர்தான் குழந்தையை கொன்றார் என்பதும், இவர் அமீத்தின் சொந்தக்காரர் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து நிலக்கர் போலீசாரிடம் கூறுகையில், "ஈசானியை வழக்கமாக மாலை வேளையில், வெளியில் அழைத்துச்செல்வேன். அதேபோல் கடந்த 14ம் தேதி மாலையும் அப்படித்தான் அழைத்து சென்றேன். அங்கு ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்தினேன். அதன்பின், சிக்கன் பக்கோடா வாங்கி கொண்டு ஈசானியை திரும்ப அழைத்து வந்தேன்.
வரும் வழியில், சிறிய பாலத்தின் சுவரில் ஈசானியை உட்கார வைத்துவிட்டு, நான் மட்டும் சிக்கன் பக்கோடா சாப்பிட்டேன். அப்போது அவள், 'எனக்கும் சிக்கன் பக்கோடா வேண்டும் என்று அடம்பிடித்தால். நான் தரமறுத்ததால் என் கையை பிடித்து கடித்தாள். இதனால் இதனால் கோவத்தில் ஈசானியை கன்னத்தில் அறைந்தேன். ஆனால் அவள் பாலத்தின் சுவரில் இருந்து கீழே விழுந்துவிட்டாள். அப்போது முகமெல்லாம் அவளுக்கு காயங்கள் ஏற்பட்டு இறந்துவிட்டால்.
இதனால் பயத்தில் என செய்வது என்று தெரியாமல் அவளது உடலை தூக்கிவந்து சூளைக்கு பின்னாடி உள்ள முட்புதரில் எறிந்துவிட்டேன்" என கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.