பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்ட பள்ளி குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
காலாவதியான சாக்லேட் சாப்பிட்டதால் தொடக்கப்பள்ளியில் 24 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது .
சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 4ம் வகுப்பு மாணவன் தனது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்துள்ளார்.
இவ்வாறு கொடுக்கப்பட்ட அந்த சாக்லேட்டை வாங்கி உண்ட மாணவர்களுக்கு சில மணி நேரத்தில் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பதறிப் போன ஆசிரியர்கள் உடனடியாக புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கு விரைந்து வந்த மருத்துவர்கள் மயங்கி விழுந்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் காலாவதியான சாக்லேட்டை உண்டதால் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காலவதியான சாக்லேட் விற்பனை செய்ததை குறித்து நெமிலி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.