#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கஜா: விட்டுவிட்டு பெய்யும் மழை! விழி பிதுங்கி நிற்கும் சென்னைவாசிகள்!
கஜா புயல் காரணமாக தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.
கஜா புயல் தென்மேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதே திசையில் சென்றால் இன்று கடலூர், வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயலால் முதலில் வட உள்மாவட்டங்கள் மட்டும் மழையைப் பெறும் எனக் கூறப்பட்டது. ஆனால், புயலின் திசையைப் பார்க்கும்போது, தென்தமிழகத்தின் உள்மாவட்டங்கள் ஒருசிலவற்றிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் முதல் சென்னையில் மழை பெய்ய தோன்றியது. அவ்வப்போது விட்டுவிட்டு செய்த மழையானது தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது வெளுத்து வாங்கும் மழை பள்ளி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
கனமழை பெய்தாலும் இடையிடையே மழை நின்று வெயில் அடிக்க துவங்குகிறது. இதனால் வெளியில் செல்லலாமா வேண்டாமா என சென்னைவாசிகள் சந்தேகத்தில் உள்ளன. ஆனால் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்னும் மழை பெய்ய துவங்கவில்லை என்றே தெரிகிறது.