தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கமல் போட்டியிட போவது மாநில கட்சிகளுடன் அல்ல.! வி.ஐ.பி தொகுதியாக மாறும் கோவை தெற்கு தொகுதி.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் பல கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். வரும் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முக்கிய அங்கம் வகிக்கின்றது. இந்தநிலையில், கமல்ஹாசன் முதலில் சென்னை ஆலந்தூர் அல்லது கோவை தெற்கு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் அல்லது இரண்டிலுமே போட்டியிடலாம் என கூறப்பட்டது. ஆனால் நேற்று கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது.
கோவை தெற்கு தொகுதியில், இந்த முறை அதிமுக-வோ, திமுக-வோ நேரடியாக போட்டியிடவில்லை. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும் இந்த தொகுதியில் களம்காண்கின்றன. தேசிய கட்சிகளை எதிர்த்து வெற்றி வெற்றால் தேசிய அளவில் கிடைக்கும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டே கோவை தெற்குத் தொகுதியில் கமல் நிற்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் கமல் தேசிய கட்சிகளுடன் நேரடியாக மோதுகிறார்.