தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சாப்பாடு, தண்ணீர் தேடி காவல்நிலைய கதவை நொறுக்கிப்போட்ட ஒற்றை காட்டு யானை..!
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகள் மற்றும் வனப் பகுதிகளில் பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலமாக இருப்பதால் நீர் மற்றும் உணவுகளைத் தேடி வனவிலங்குகள் தங்களது இடத்தை நகர்த்தி வருகின்றது. இதனால் அவை ஊருக்குள் வரும் நிகழ்வும் நடந்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலந்துறை காருண்யா காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை, உணவு மற்றும் நீர் தேடி அலைவதாக தெரிய வருகிறது. அதற்கு எந்த உணவும் கிடைக்காத விரக்தியில் காவல் நிலைய தடுப்பு இரும்பை சேதப்படுத்தி சென்றுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் காவலர்கள் இரவு நேர கண்காணிப்பு பணிக்கு சென்று விட, காவல்நிலையத்தில் பெண் காவல் அதிகாரி ஒருவர் பணியில் இருந்துள்ளார்.
அப்போது, நள்ளிரவு 12 மணி அளவில் ஒற்றை காட்டு யானை வந்த நிலையில், அது இரும்பு கதவு மற்றும் தடுப்பு பலகையை நொறுக்கியுள்ளது. சத்தம் கேட்டு சென்ற பெண் காவலர் யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தை பூட்டி உள்ளே இருந்துள்ளார்.
பின்னர், விஷயம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் யானையை விரட்டினர்.