தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வரதட்சணையாக இது மட்டும்தான் வேணும்! வித்தியாசமான கண்டிஷனால் ஆச்சரியத்தில் மூழ்கடித்த ஐஏஎஸ் அதிகாரி! குவியும் வாழ்த்துக்கள்!
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள ஒட்டங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். பொறியியல் படிப்பு முடித்த இவர் ஐஐடியில் எம்.டெக் முடித்துள்ளார். மேலும் இவருக்கு சிறுவயதிலிருந்து ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பதே மாபெரும் லட்சியமாக இருந்து வந்துள்ளது. மேலும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரை அவரது பெற்றோர்கள் ஆடு மாடு மேய்த்து படிக்க வைத்துள்ளனர்.
மேலும் சிவகுருவும் அவ்வப்போது தனது பெற்றோருக்கு உதவியாக இருந்துள்ளார்.பின்னர் அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் செல்போன் ரீசார்ஜ் கடையில் பகுதிநேர ஊழியராக வேலை பார்த்தும் வந்துள்ளார். இந்நிலையில் சிவகுரு பிரபாகரன் கடந்த 2018 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியுள்ளார். அதில் அகில இந்திய அளவில் 101வது இடத்தையும் தமிழக அளவில் 3-வது இடத்தையும் பிடித்தார்.
அதனைத்தொடர்ந்து திருநெல்வேலியில் சப் கலெக்டராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திருமணத்திற்காக ஏராளமான வரன்கள் பார்க்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவர் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவரைதான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த 26ஆம் தேதி சிவகுரு அவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணபாரதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.மேலும் சிவகுரு திருமணத்திற்கு முன்பே தனக்கு எந்த வரதட்சனையும் வேண்டாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகு கிராமங்களில் வாரத்தில் இருமுறை ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். இதற்கு மணப்பெண்ணும், அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.