திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு பள்ளி விடுதி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை புகார்: ஒருவாரமாக தொடரும் விசாரணை..!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆதிதிராவிடர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதியில் தங்கியிருக்கும் நான்கு பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. இதனையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அதிகாரிகள் மற்றும் ஆதி திராவிடர் நல ஆணைய அதிகாரிகள் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் எழுந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இது வரை வழக்கு பதிவுசெய்யப்படவில்லை. எனவே, இந்த புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரித்து பள்ளி மாணவிகளுக்குப் பாலியல்ரீதியான தொல்லைக் கொடுத்தவர்களை உடனடியாகக் கைதுசெய்து விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பள்ளி குழந்தைகள் மீதான பாலியல் புகார் குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக கமிட்டி அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகள் என்பதால் இந்த பிரச்சினையை கவனமாக கையாள வேண்டியுள்ளது. குழந்தைகள் நல பாதுகாப்பு துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அவர்களின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.