தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆக உயர்வு.. துபாயிலிருந்து திருநெல்வேலி வந்தவருக்கு கொரோனா!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 350 பேருக்கு மேல் தொற்றியுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் சென்னையில் சிகிச்சை பெற்ற முதல் நபர் குணமடைந்துவிட்டார். மீதமுள்ள 8 பேரில் 4 பேர் சென்னையிலும், 2 பேர் ஈரோட்டிலும, கோவை மற்றும் திருநெல்வேலியில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பெருந்தொற்று பாதிப்பு
— மு.குணசேகரன் Gunasekaran (@GunasekaranMu) March 22, 2020
மொத்தம் 9 பேர்
சென்னை - 5 ( இதில் ஒருவர் குணமாகிவிட்டார், ஒருவர் தனியார் மருத்துவமனையில்)
கோவை- 1
ஈரோடு - 2
திருநெல்வேலி -1 @News18TamilNadu
நேற்று கடைசியாக கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் கலிபோர்னியாவில் இருந்து வந்த 64 வயது பெண். இவர் ஸாடான்லி மருத்துவமனையிலும் துப்யிலிருந்து வந்த 43 வயதான மற்றொரு நபர் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#coronaupdate: 2 new positive cases of #Covid19. 64 Y F, traveled from California, under isolation at Stanley Med College. 43 Y M, returned from Dubai, under isolation at Tirunelveli Med College. Both the pts are stable. @MoHFW_INDIA #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 22, 2020