இன்ஜினியரிங் முடித்துவிட்டு கவுன்சிலர் ஆன பட்டதாரி இளைஞர்..! பதவி ஏற்றதும் சுவர் ஏறி குதித்து ஓடிய பரிதாபம்!



councilor-candidate-jump-from-wall-at-madurai

நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, சுயேச்சையாக போட்டியிட்ட அரவிந்த் என்ற பொறியியல் பட்டதாரி 1300 வாக்குகள் விதியசத்தில் வெற்றி பெற்றார்.

பொறியியல் பட்டம் பெற்றுள்ள அரவிந்த் அதனுடன் சேர்த்து வழக்கறிஞர் படிப்பும் முடித்துள்ளார். நடுமுதலைக்குளத்தை சேர்ந்த அரவிந்த், தாய் - தந்தையை இழந்த நிலையில், தனது பாட்டி வீட்டில்தான் இருந்துள்ளார்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் இன்று பதவியேற்ற நிலையில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர். 8 வது வார்ட் உறுப்பினராக அரவிந்த் பதவியேற்று முடித்ததும் சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Election 2019பல ஒன்றியங்களில் தலைவர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாலும், அதனால் அரவிந்த் அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், செல்லம்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகள் இருக்கும் நிலையில், 9 வார்டில் அதிமுகவும், 6 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் சுயேட்சையான அரவிந்தும் வெற்றி பெற்றனர். இதில் அதிமுக அதிக மெஜாரிட்டியில் இருப்பதால் அரவிந்தின் ஆதரவு எந்த வகையிலும் இரு கட்சிக்கும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.