#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நீதிமன்றம் அனுமதி! அங்கு மட்டும் கரைக்க அனுமதி இல்லை!
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டது. வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளைத் தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து வீடுகளில் வைத்து வழிபடும் களிமண்ணாலான விநாயகர் சிலைகளைத் தனி நபர்களே நீர்நிலைகளில் கரைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர். சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரையைத் தவிரப் பிற நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.