மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#ViralVideo: புயலுக்கு இடையில் பகுமானமாக சாலையை கடந்த முதலை.! அச்சத்தில் வாகன ஓட்டிகள்.!!
சென்னையை புரட்டி எடுத்து வரும் மிக்ஜாம் புயலின் காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீரானது சாலைகளை சூழ்ந்துள்ளது. இதனால் சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தரைக்காற்று பலமாக வீசுவதால் மக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற தேவைகளுக்கு வெளியே வர வேண்டாம் எனவும், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக காவல்துறையினரை தொடர்புகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பெருங்களத்தூர், நெடுங்குன்றம் சாலை, வேலம்மாள் பள்ளி அருகே முதலை ஒன்று இரவில் சாலையை கடந்து சென்றதாக அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த முதலையை வனத்துறை அதிகாரிகள் பிடித்து முதலை பண்ணைகளில் விட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.