மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது.. கர்மபலன் செய்த சம்பவம்.!
வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 15 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, கத்தாரில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணத்தை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது, திருச்சியை சார்ந்த ராமலிங்கம் (46) என்பவரின் பேரில் புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இவர் நைஜீரிய நாட்டில் இருந்து கத்தார் வழியே சென்னை வந்துள்ளார்.
இவரின் மீது கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 2007 ம் ஆண்டு புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. அதாவது, மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமை செய்து அவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதியப்பட்டுள்ளது.
ராமலிங்கத்தை கடந்த 15 ஆண்டுகளாக காவல் துறையினர் தேடி வந்த நிலையில், விமான நிலையத்தில் அவர் சிக்கிக்கொண்டார். அவரை பிடித்து வைத்துள்ள அதிகாரிகள் திட்டக்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.