மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுவரில் துளையிட்டு வீட்டில் கொள்ளை; ஒருபொருளும் இல்லாததால் சி.சி.டி.வி-யோடு எஸ்ஸான சம்பவம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் திட்டக்குடி பட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையமுத்து. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான வீடு ஒன்று விருதாச்சலம் - திட்டக்குடி சாலையில் உள்ள பட்டூர் கிராமத்தில் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று இவரது வீட்டின் சுவரைத் துளையிட்ட கொள்ளையர்கள், வீட்டிற்குள் இருந்த எலக்ட்ரானிக் பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். மேலும், வீட்டிற்குள் நகை&பணம் போன்ற பொருள்கள் இல்லாத நிலையில், தரைத்தளத்தில் ரகசிய அறை இருக்கலாம் என்ற நினைப்பில் டைல்ஸ் கற்களை உடைத்து நொறுக்கியுள்ளனர்.
பின்னர், எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமிரா போன்றவற்றையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.