மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குட் நியூஸ்: கிடுகிடுவென குறைந்த சிலிண்டர் விலை... கொண்டாட்டத்தில் மக்கள்!!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை அடிப்படையாக கொண்டு, மாதம் தோறும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதன் காரணமாக மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன. மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது.
ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ரூ.2,186 ஆக விற்பனையாகி வருகிறது. ஆனால் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1,018.50-க்கு விற்பனையாகிறது.