மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டீ குடிக்க சென்ற நண்பர்களுக்கு நடந்த சோகம்; நொடியில் நடந்த விபத்தால் 3 பேர் பலி.. கண்ணீர் தகவல்.!
நள்ளிரவு நேரத்தில் டீ குடித்துவிட்டு வர சென்ற நண்பர்களில் 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாடியில் வசித்து வருபவர் வஜ்ரவேல். இவரின் மகன் ராகுல் (வயது 22). லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். அரிச்சந்திரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரி. இவரின் மகன் சந்தோஷ் (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதே பகுதியில் வசித்து வருபவர் அரசன். இவரின் மகன் ஜீவபாரதி (வயது 21). இவர் கல்லூரியில் பயின்று வருகிறார். ஜெகன் குமார் என்பவரின் மகன் கார்த்திக் (வயது 22), குமாரசாமிபேட்டையில் வசித்து வருபவர் துரை. இவரின் மகன் கவியரசு (வயது 21). இவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள்.
நண்பர்களான இவர்கள் நேற்று காரில் சென்று தேநீர் அருந்தி வரலாம் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி, கவியரசு காரை ஓட்டி வந்த நிலையில், ஐந்து பேர் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கே.என் சவுளூர் பாலத்தில் சென்றுகொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, இவர்களின் வாகனத்திற்கு முன்பு இரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரியின் மீது கார் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கியதில் ராகுல், ஜீவபாரதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை கண்டு அதிர்ந்துபோன வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் லாரி - காரை அப்புறப்படுத்தினர். பின் விபத்தில் உயிருக்கு போராடிய கவியரசு உட்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கவியரசு மற்றும் கார்த்திக் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக தர்மபுரி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.