மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் திருமணம் செய்ததற்கு பெண் தரப்பு எதிர்ப்பு; பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்..!
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு முருகன் கோவில் தெருவை சேர்ந்த 21 வயது இளம்பெண், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்ணுக்கு வேறொரு வரன் பார்த்து திருமணம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்துள்ளன.
இதனால் பெண்மணி தனது காதலருடன் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், திருமணமும் செய்துகொண்டுள்ளார். இதற்கிடையில், பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவரின் தந்தை காதல் ஜோடிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, தங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கக்கூறி காதல் திருமணம் செய்த ஜோடி தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.