மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனுதினமும் மனைவியை உடலுறவுக்கு அழைத்து கொடுமை செய்த கணவன்.. கோபத்தில் நடந்த கொடூரம்.. மனைவி பலி., கணவர் உயிர் ஊசல்.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 62). இவர் விவசாயியாக பணியாற்று வருகிறார். பெருமாளின் மனைவி தனம் (வயது 55). தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர்.
இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கூலி வேலைக்கு சென்று தனியாக வசித்து வந்த தாமதிகளில், பெருமாள் தினமும் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதனால் கணவன்-மனைவியுடைய தகராறு ஏற்பட்டு உள்ளது. அக்கம்பக்கத்தினர் இதனை சமாதானம் செய்து வைத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் கணவன்-மனைவியுடைய மீண்டும் செக்ஸ் தொடர்பாக தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த தனம் கோபித்துக் கொண்டு தனது தாயாரின் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு தனத்தின் தாயார் மற்றும் மூன்று சகோதரர்கள் தனத்தை சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை பெருமாள் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த நிலையில், மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பெருமாள் தனத்தின் கழுத்தை லுங்கியால் நெரித்து கொலை செய்துள்ளார். பின் அங்கிருந்த கத்தியால் மனைவியின் வயிறு மற்றும் உடலில் ஆவேசமாக குத்தியதில், தனம் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தான் மனைவியை கொலை செய்ததை உணர்ந்த பெருமாள், இறுதியில் கையை அறுத்து தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து இருக்கிறார். தனத்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பாப்பாரப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தனத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பெருமாளை கைது செய்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதி ஷைத்தான். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.