மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமியிடம் அத்துமீறிய அக்கா கணவர்: மனைவி கர்ப்பமானதால் வலையில் வீழ்த்தி துணிகரம்.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, பில்பருத்தி கிராமத்தில் வசித்து வரும் 27 வயதுடைய இளைஞர், தனியார் வங்கியில் கடனை வசூலிக்கும் ஊழியராக வேலை பார்க்கிறார்.
இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பெண்ணும் 4 மாத கர்ப்பிணியாகி இருக்கிறார்.
இந்நிலையில், மனைவியின் தங்கையான பாலிடெக்னீக் கல்லூரி மாணவியும் (வயது 16), அக்கா கணவர் என்பதால் இளைஞருடன் அன்பாக பழகி வந்துள்ளார்.
இதனிடையே, மனைவி கர்ப்பமான பின்னர் கயவனின் காம எண்ணம் சிறுமி மீது திரும்ப, அவருக்கு பிடித்த பல பொருட்களை வாங்கிக்கொடுத்து தனது வலையில் விழவைத்துள்ளான்.
பின்னர், சம்பவத்தன்று ஆட்கள் இல்லாத வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று, சிறுமியிடம் பல ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறார். சிறுமிக்கு இதனை பெற்றோரிடம் கூறவில்லை.
காலப்போக்கில் சிறுமியின் உடல்நலம் காட்டிக்கொடுக்க, அவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். பெற்றோரின் கடுமையான கண்டிப்புக்கு பின்னர் மாமாவின் அதிர்ச்சி செயலை சிறுமி விவரித்து இருக்கிறார்.
அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். இந்த தகவலை அறிந்த இளைஞர் தலைமறைவாகவே, மாணவியின் பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்.