மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யூடியூப் பார்த்து சைக்கிள் டியூப்புடன் கிணற்றில் குதித்த 9 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
ஆன்லைனில் வீடியோ பார்த்து சைக்கிள் டியூபோடு நீச்சல் பயிற்சிக்கு முயற்சித்த சிறுவன் நீரில் மூழ்கி பலியான சோகம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருமத்தூர்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல். இவரின் மகன் ருத்ரேஷ் (வயது 9). இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
ருத்ரேஷும், அவருடன் பயின்று வரும் மாணவருடன் சேர்ந்து செல்போனில் யூடியூப் மூலமாக நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? என்ற காணொளியை பார்த்துள்ளனர். பின்னர், இருவரும் சைக்கிள் டியூபை வயிற்றில் கட்டி கிணற்றுக்கு நீச்சல் பயில புறப்பட்டுள்ளனர்.
அந்த சமயத்தில், சைக்கிள் டியூப்புடன் கிணற்றுக்குள் குதித்த ருத்ரேஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகி இருக்கிறான். அவருடன் வந்த மற்றொரு மாணவர் உதவிக்கு ஆட்களை அழைத்தும் பலனில்லை.
விரைந்து வந்த பொதுமக்கள் ருத்ரேஷை சடலமாக மீட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கம்பைநல்லூர் காவல் துறையினர், ருத்ரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.