மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 ஆம் வகுப்பு சிறுமியின் சடலம் தண்டவாளத்தில் மீட்பு.. திண்டுக்கல் அருகே பேரதிர்ச்சி சம்பவம்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம் பகுதியை சேர்ந்தவர் சற்குணம். இவரின் மகள் கௌரி (வயது 17). சிறுமி திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் பள்ளிக்கூடத்திற்கும், அவரின் வீட்டிற்கும் அதிக தூரம் என்பதால், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள மாமா நடராஜனின் வீட்டில் தங்கியிருந்தவாறு பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
மேலும், டியூசனுக்கு தினமும் சென்று வந்த நிலையில், நேற்று மாலை வீட்டை விட்டு சென்ற சிறுமி கௌரி வீட்டிற்கு வரவில்லை. இதனால் தகவலை நடராஜன் சற்குணத்திற்கு தெரியப்படுத்தவே, அனைவரும் சேர்ந்து கௌரியை தேடியுள்ளனர்.
இந்நிலையில், பாலகிருஷ்ணாபுரம் அருகேயுள்ள இரயில்வே தண்டவாளத்தில் சிறுமியின் சடலம் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர்கள் அது கௌரியின் உடல் என்பதை உறுதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக பழனி இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கௌரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.