மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
9 வயது சிறுமி, பள்ளி மைதானத்தில் உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்பு - திண்டுக்கல்லில் பேரதிர்ச்சி.!
பள்ளிக்கு சென்ற சிறுமி, பள்ளி மைதானத்தில் உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், கீழ் மலைப்பகுதியில் இருக்கும் பாச்சலூர் கிராமத்தை சார்ந்தவர் சத்யராஜ். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் பிரியதர்ஷினி (வயது 10) மற்றும் பிரித்திகா (வயது 9), மகன் நவீன் குமார் (வயது 6).
குழந்தைகள் 3 பேரும் பாச்சலூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். பிரித்திகா 5 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல அக்காக்கள் - தம்பி என மூவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
காலை 11 மணியளவில் வகுப்பறையை விட்டு வெளியே சென்ற சிறுமி பிரித்திகா, மீண்டும் வகுப்பறைக்கு வரவில்லை. இந்த நிலையில், பிரித்திகா பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தீயில் கருகியவாறு பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை அறிந்து வந்த பிரித்திகாவின் தந்தை சத்யராஜ், மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுதொடர்பான தகவல் காவல் துறையினருக்கும் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரித்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், மாணவி பிரித்திகாவை யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.