சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
பாரத் பெயர் மாற்றம் குறித்து இயக்குநர் அமீர் போட்ட வாட்சப் ஸ்டேட்டஸ்!!

இந்தியா முழுவதும் தற்போது பெரிதும் பேசப்பட்டு வரும் விவகாரம் என்றால் அது இந்தியாவை பாரத் என்று குறிப்பிட்டது தான். இதனால் பலர் ஆதரவு தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியா கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஜெர்சியில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிட BCCI க்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்க்கு தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இப்படி பலதரப்பினரிடம் பல கருத்துக்கள் இருக்க இயக்குநர் அமீர் அவரது வாட்சப்பில் இது குறித்த பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் அதில், "இந்தியா, பாரதம், காவி தேசம் எது வேண்டுமானாலும் வைத்து கொள். எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் எங்கள் நாடு தமிழ் நாடு" என்று குறிப்பிட்டிருந்தார்.