ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பா?!. அதுக்கு வாய்ப்பே இல்ல ராஜா!.. செவிட்டில் அறைந்த உயர் நீதிமன்றம்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியேற வடிகால் வசதியில்லாமல் குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதன் காரணமாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் ,‛‛நிலம் பொதுமக்களுக்கு சொந்தமானது என மனுதாரர்கள் தரப்பில் நிரூபிக்கவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி அரசு நிறுவனங்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குடிநீர் ஆதாரம் மட்டுமின்றி சுற்றுச்சூழலை சமநிலையாக வைப்பதிலும் நீர்நிலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பது அதனை பாதுகாப்பதில் இருந்து தவறும் செயலாக தான் பார்க்க வேண்டும்''.
மேலும் நீர்நிலைகளை பாதுகாப்பது என்பது அரசின் கடமையாகும். அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை. இயற்கையை பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும். இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் புவிவெப்பமயமாதல், சுனாமி போன்ற பேரிடர்கள் மூலம் இயற்கை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'' என கூறியதுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.