தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தமிழகத்தில் அசுர வேகமெடுக்கும் கொரோனா! எந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு! விவரங்கள் இதோ!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இத்தகைய கொடூர கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகமாகி கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவற்றில் சென்னையில் 163, கோயம்புத்தூரில் 60, ஈரோட்டில் 58, நெல்லையில் 56, திண்டுக்கல்லில் 46, நாமக்கல்லில் 41, தேனியில் 40, திருச்சியில் 36, செங்கல்பட்டில் 28, ராணிப்பேட்டையில் 27, திருப்பூரில் 26, மதுரையில் 25, கரூரில் 23, தூத்துக்குடியில் 22 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விழுப்புரத்தில் 20, திருப்பத்தூரில் 16, கன்னியாகுமரியில் 14, கடலூர், திருவள்ளூர், திருவாரூரில் தலா 13 பேர், நாகப்பட்டினம் 12 பேர், விருதுநகர், தஞ்சாவூர், வேலூர் பகுதிகளில் தலா 11 பேர், திருவண்ணாமலையில் 9 பேர், காஞ்சிபுரம், சிவகங்கை பதவிகளில் தலா 6 பேர், நீலகிரியில் 4 பேர், தென்காசி, கள்ளக்குறிச்சி பகுதிகளில் தலா 3 பேர், ராமநாதபுரத்தில் தலா 2 பேர், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.