திமுகவை அணைக்கட்டும் பொதுமக்கள்.. உதயநிதியை மடக்கி கேள்விக்கணைகள்.. நேக்காக சமாளித்து எஸ்கேப்..! 



DMK Candidate Election Campaign Udhayanidhi Stalin Cross Questioned by Woman

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம், புகளூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த உதயநிதியிடம், சில பெண்கள் "மாதம் ரூ.1,000 எப்போது தருவீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர். 

இதனைக்கேட்ட உதயநிதி "விரைவில் தருவோம், 4 வருடம் இருக்கே இன்னும்" என்று தெரிவித்து சென்றார். அதனைத்தொடர்ந்து, தஞ்சாவூரில் உதயநிதி பேசும் போது, "திமுக ஆட்சிக்கு வந்ததும் பல வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. இன்னும் பல வாக்குறுதிகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார். 

dmk

அங்கிருந்த பெண்மணி ஒருவர், "நகைக்கடன் வாங்கியிருக்கிறேன். எனக்கு தள்ளுபடி ஆகவில்லையே" என்று தெரிவித்தார். உதயநிதி பெண்ணிடம், "எந்த வங்கியில் எத்தனை பேரில் வைத்துள்ளேர்கள்? சீட்டு இருந்தால் கொடுங்கள்" என்று கூறினார். பெண்ணோ "நான் சீட்டு எடுத்து வரவில்லையே" என்று கூற, உதயநிதி "என்னமா குறை சொல்ற, சீட்டு கொண்டு வர வேண்டாமா?. உன் பெயர் என்ன?" என்று தெரிவித்தார்.

அந்த பெண்ணோ, "எனது பெயர் தங்கம்" என்று கூறவே, உதயநிதி "தங்கமே கடன் வாங்கியிருக்கு" என்று கூறி சிரித்து பேச்சை மழுப்பினார். இந்த கேள்வியை கேட்ட பெண்ணை திமுகவினர் வெளியேற்ற, வண்டிக்கார தெரு பகுதியில் வசித்து வரும் பெண்மணி கவிதா என்ற பெண்மணி, "நான் மூன்று பேரக்குழந்தைகளை வளர்த்து வருகிறேன். அவர்களின் பெற்றோர் இல்லை. எனக்கு உதவி செய்யுங்கள்" என்று கேட்கவே, "எம்.எல்.எவ்விடம் கேளுங்கள்., உதவி கிடைத்திடும்" என்று கூறி புறப்பட்டு சென்றார்.