மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தர்மபுரி: வனப்பகுதியில் திமுக முக்கிய பிரமுகரின் மகள் சடலமாக மீட்பு... காவல்துறை தீவிர விசாரணை.!
திமுகவின் முக்கிய பிரமுகரின் மகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது . இச்சம்பவம் தொடர்பாக கொலைக்கான காரணத்தை அறிய காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் . இந்த சம்பவத்தால் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோம்பை வனப்பகுதியில் திமுக கவுன்சிலரும் முக்கியப் புள்ளியான புவனேஸ்வரன் என்பவரது மகள் ஹர்ஷா(23) இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அவர் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா என பல கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். முக்கிய புள்ளியின் மகள் வனப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்து இருக்கிறது.