#Breaking: எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.!
பரபரப்பு வீடியோ: அம்மா உணவகத்தை அடித்து உடைக்கும் திமுகவினர்!! விஷயம் தெரிந்ததும் அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்
திமுக கட்சியை சேர்ந்த சிலரால் அம்மா உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட மிகவும் பயனுள்ள திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம். ஏழை எளிய மக்கள், அன்றாடம் வேளைக்கு செல்லும் பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திட்டம்தான் இந்த அம்மா உணவகம்.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்று திமுக சார்பாக அதன் தலைவர் முக. ஸ்டாலின் அவர்கள் விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் சென்னை ஜெ.ஜெ.நகர் அம்மா உணவகத்தின் வாயிலில் இருந்த பெயர் பதாகை, உள்ளே இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை திமுக கட்சியை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கும் காட்சி வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சென்னை ஜெ.ஜெ.நகர் அம்மா உணவகத்தில் இருந்த ஊழியர்களை உருட்டு கட்டையால் தாக்கி திமுகவினர் கொலைவெறி தாக்குதல். pic.twitter.com/96QwTMWFOP
— AIADMK (@AIADMKOfficial) May 4, 2021
இது சம்மந்தமான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் திமுகவினரின் செயலுக்கு கடும் கண்டனங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்.” என்று பதிவிட்டுள்ளார்.
மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்... pic.twitter.com/8FjmbSzTgS
— Subramanian.Ma (@Subramanian_ma) May 4, 2021