தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
எம்.எல்.ஏ பதவியை இழந்தார் திமுக அமைச்சர் பொன்முடி; ஆட்சியில் குவித்த சொத்தால், அதிகாரத்தில் இருந்தபோதே ஆப்பு.!
கடந்த 2006ம் ஆண்டு திமுக அமைச்சரவையில் கனிமவளத்துறை, உயர்கல்வித்துறை பொறுப்பில் இருந்த அமைச்சர் பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. வழக்கில் குற்றசாட்டுகள் உறுதி செய்ய்யப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இலஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு, விழுப்புரம் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்தனர். அமைச்சர் பொன்முடியை சொத்துகுவிப்பு குற்றவாளியாகவும் அறிவித்தனர்.
பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சி காணொளி வாயிலாக இறுதி விசாரணையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விபரங்கள் இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது.
வரும் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்போது சிறை தண்டனை விதிக்கப்படவில்லை எனினும், அவர் குற்றவாளி என்பதால் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர இயலாது. இதனால் அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்படும்.