தெற்கே திமுகவை வீழ்த்தி வெற்றிகண்ட புதிய தமிழகம் கட்சி.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்..!
தமிழகத்தில் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பல்வேறு இடங்களில் அமோக வெற்றி அடைந்துள்ளது. மேலும், கடந்த 15 முதல் 20 வருடத்திற்கும் மேலாக கைப்பற்றாமல் இருந்த நகராட்சிகளும் திமுக தனதாக்கியுள்ளது. அதிமுகவின் கோட்டை என்று கருதப்படும் பல்வேறு இடங்களையும் திமுக தன்வசப்படுத்தியுள்ளதால், அதிமுக தலைமை பெரும் சோகத்தில் இருக்கிறது.
இந்த தேர்தலில் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் புதிய தமிழகம் கட்சியின் சார்பிலும் பல்வேறு வேட்பாளர்கள் களமிறங்கினர். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை நகராட்சி 25 ஆவது வார்டில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் வினோத் குமார், திமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி அடைந்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை பேரூராட்சி 1 ஆவது வார்டில், புதிய தமிழகத்தின் வேட்பாளர் அழகேஸ்வரி வெற்றி அடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ. புதுப்பட்டி பேரூராட்சியின் 4 ஆவது வார்டு புதிய தமிழகம் வேட்பாளர் வள்ளி பச்சைமலையான் திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி அடைந்துள்ளார்.
கீழப்பாவூர் பேரூராட்சி 3 ஆவது வார்டு புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் மாலதி முருகேசன், திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி அடைந்துள்ளார். இதனைப்போல, தென்காசி சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி 12 ஆவது வார்டு வேட்பாளர் வெற்றி அடைந்துள்ளார். இவர்களை தவிர்த்து ஏற்கனவே 2 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தென்காசி மாவட்டம் - சுரண்டை நகராட்சி 25-வது வார்டு புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் வினோத்குமார் அவர்கள், திமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.! pic.twitter.com/q3iwz64vnN
— Puthiya Tamilagam (@PTpartyOfficial) February 22, 2022