மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போத விஷ வாயு தாக்கி 2 பேர் பலி.!
சென்னை ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மத்தியபடை தொழிற்சாலை குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் மற்றும் தேவன் இருவரும் சேர்ந்து இறங்கியுள்ளனர்.
அப்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நிலையில், திடீரென விஷவாயு தாக்கியதில் மயங்கிய இருவரையும் மீட்டு உடனடியாக ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.